News December 28, 2024
கள்ளக்குறிச்சி சந்தையில் காய்கறி விலை விவரம்

கள்ளக்குறிச்சி சந்தையில் இன்றைய(டிச 28) காய்கறி விலை. தக்காளி ரூ.28, கத்திரிக்காய் ரூ.40, அவரைக்காய் ரூ.110, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.60, புடலங்காய் ரூ.50, பீர்க்கங்காய் ரூ.70,.முள்ளங்கி ரூ.50, இஞ்சி ரூ.80, சி.வெங்காயம் ரூ.70, உருளை ரூ.50, கேரட் ரூ.80, பீன்ஸ் ரூ.100, முட்டை கோஸ் ரூ.40, செளசெள ரூ.48, பீட்ரூட் ரூ.70 என சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Similar News
News March 7, 2026
கள்ளக்குறிச்சியில் ரேஷன் பிரச்னையா..? உடனே CALL!

கள்ளக்குறிச்சி மாவட்ட மக்களே.., உங்களது ரேஷன் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்குதல், மாற்றம், முகவரி மாற்றம் மற்றும் ரேஷன் கடை மீது எந்த வித புகார்கள் இருந்தாலும் 1967 (அ) 1800-425-5901 எனும் கட்டணமில்லா எண்ணை அழைத்து உங்களது புகாரை தெரிவிக்கலாம். ஏதேனும் முறைகேடு நடந்தாலும் சரியான ஆவணங்களுடன் உங்களது புகார்களை தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News March 7, 2026
சங்கராபுரம் அருகே தீயில் கருகி பலி!

கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் அருகே நெடுமானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். அவரது மனைவி மண்ணாங்கட்டி(85). இவர் நேற்று முன் தினம் குளிப்பதற்காக சுடுதண்ணீர் வைக்க விறகு அடுப்பில் தீ பற்ற வைத்ததாக தெரிகிறது. அப்போது, எதிர்பாராதவிதமாக தீ அவரின் சேலையில் பிடித்தது. இதில், உடல் கருகி கடுமையாக தீக்காயமடைந்த அவரை, மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News March 7, 2026
கள்ளக்குறிச்சி: இரவு நேர ரோந்து விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மார்ச் 6-ம் தேதி இரவு முதல் மார்ச் 7-ம் தேதி காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ அல்லது 100 என்ற எண்ணுக்கோ அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


