News September 28, 2025
கள்ளக்குறிச்சி: சங்கிலி பறிக்க முயன்ற இளைஞர் கைது

கள்ளக்குறிச்சி பகுதியில், ஒரு பெண்ணிடம் சங்கிலி பறிக்க முயன்ற இளைஞரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, அந்த இளைஞரை மீட்டு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். விசாரணையில், அவர் தியாகதுருகத்தைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் அந்த இளைஞரைக் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.
Similar News
News January 6, 2026
கள்ளக்குறிச்சி: மருமகளை கழுத்தறுத்து கொன்ற மாமியார்!

சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மரியருசோரியோ(35). இவரது மனைவி நந்தினி(29). இவரைக் கடந்த 29அம் தேதி முதல் காணவில்லை எனப் புகார் அளித்ததன் பேரில் நடந்த விசாரணையில், மரியருசோரியாவின் தாயார் கிறிஸ்டோப் மேரி, ஏற்கனவே திருமணமான தனது மருமகளை, தன் மகன் காதலித்து மறுமணம் செய்தது தனக்கு பிடிக்காததால் தனது தோழி எமிலியுடன் சேர்ந்து மறுமகளை கழுத்தறுத்து கொலை செய்ததாக வாக்குமூலமளித்தார்.
News January 6, 2026
கள்ளக்குறிச்சியில் வாலிபர் துடிதுடித்து பலி!

ராமநத்தம் அடுத்துள்ள வாகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்திவேல்(28). இவர் துபாயில் வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறைக்காக ப்சொந்த ஊருக்கு வந்த இவர், நேற்று(ஜன.5) மதியம் நண்பர்களுடன் அந்தப் பகுதியில் உள்ள கிணற்றில் குளிப்பதற்காக சென்றார். அப்போது நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் போராடி மீட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 6, 2026
கள்ளக்குறிச்சியில் தூக்கிட்டு தற்கொலை!

கெடார் அடுத்த வெங்கத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜாக்கண்ணு(61). இவரது மகன் பாஸ்கரனுக்கும்(31) ஹரிணி என்ற பெண்ணிற்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பாஸ்கரனை விட்டு ஹரிணி பிரிந்து சென்று, 2 ஆண்டுகளாக விருத்தாச்சலத்தில் வாழ்ந்து வருகிறார். இதனால் மனமுடைந்த தந்தை ராஜாக்கண்ணு, நேற்று முன் தினம் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.


