News October 16, 2025
கள்ளக்குறிச்சி: கோயிலில் குழந்தை திருமணம்!

வெள்ளிமலை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இன்னாடு தினேஷ் என்பவருடன் வெள்ளிமலை முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இருவரும் கணவர் மனைவியாக வாழ்ந்து வந்த நிலையில், சிறுமி தற்போது 3 மாத கர்ப்பிணியாக உள்ளார். இது குறித்து மகளிர் ஊர் நல அலுவலர் செல்வி அளித்த புகாரில் தினேஷ் & அவரது குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட ஐவர் மீது போலீசார் நேற்று (அக்.15) வழக்கு பதிந்தனர்.
Similar News
News October 16, 2025
கள்ளக்குறிச்சி: உங்க வீட்டில் ஆண் குழந்தை இருக்கா?

பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆண் குழந்தைகளின் நலனுக்காக அஞ்சல் துறையால் செயல்படுத்தப்படுகிறது. 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெற்றோர் & பாதுகாவலர் மூலமாகவும், 10 வயதிற்கு மேற்பட்டவர்கள் தாங்களாகவே கணக்கை துவக்க முடியும். (எ.கா) மாதம் 1000 என ஆண்டுக்கு ரூ.12,000 முதலீடு செய்தால் 15 ஆண்டு முடிவில் ரூ.1,80,000 (ம) ரூ.1,35,572 வட்டியுடன் மொத்தமாக ரூ.3,14,572 கிடைக்கும். ஷேர் பண்ணுங்க.
News October 16, 2025
கள்ளக்குறிச்சி: ஒரு புகாருக்கு ரூ.1,000-மிஸ் பண்ணாதீங்க!

நெடுஞ்சாலையில் நாம் உபயோகிக்கும் கழிவறைகள் பெரும்பாலும் முகம் சுளிக்க வைக்கும் வகையில்தான் உள்ளது. இதைத் தடுக்க மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. நெடுஞ்சாலையில் உள்ள கழிவறைகள் சுத்தமாக இல்லையெனில், அதனை புகைப்படம் எடுத்து, <
News October 16, 2025
கள்ளக்குறிச்சிக்கு மழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடல் & அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்டில் சொல்லிட்டு போங்க!