News April 14, 2025

 கள்ளக்குறிச்சி: குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குரூப் 4 தேர்விற்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். பயிற்சி மற்றும் தேர்வுகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் தங்களது புகைப்படம், ஆதார் எண் ஆகிய விவரங்களுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் 16ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். ஷேர் பண்ணுங்க

Similar News

News April 15, 2025

திருமணத் தடை நீக்கும் ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர்

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டையில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீபிரஹன்நாயகி சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. பிரம்மஹத்தி தோஷம் மற்றும் திருமணத் தடை உள்ளவர்கள், இந்த கோயிலின் மாடத்தில் உள்ள சுயம்பு வடிவமாக காட்சி அளிக்கும் அர்த்தநாரீஸ்வரரை வழிபட்டால் அனைத்து தோஷங்களும் நீங்கும். உடனடியாக திருமணம் நடைபெறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. ஷேர் பண்ணுங்க.

News April 15, 2025

விஷச்சாராய வழக்கு 3 மாதத்தில் முடிக்கப்படும்- சிபிஐ

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு இன்னும் 3 மாதத்தில் முடிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளிகளான தமோதிரன், கன்னுகுட்டி ஆகியோர் ஜாமின் வழங்க மனுதாக்கல் செய்திருந்த நிலையில், ஜாமீன் வழங்கக்கூடாது எனவும் சிபிஐ கூறியுள்ளது. மேலும், வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளார்கள் என்பதை தெரிவிக்க சிபிஐக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

News April 15, 2025

மெட்ராஸ் ஐகோர்டில் வேலை; டிகிரி இருந்தால் போதும்

image

சென்னை உயர் நீதிமன்றத்தில் தனி உதவியாளர், எழுத்தர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. மொத்தம் 47 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கு இளநிலை பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும். மாதம் ரூ.20,600 முதல் ரூ. 2,05,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கே கிளிக்<<>> செய்து வரும் மே.5ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!