News October 3, 2025
கள்ளக்குறிச்சி: குட்நியுஸ்! School Fees கட்ட தேவையில்லை

தனியார் பள்ளிகளில் மாணவர்கள் LKG- 8ம் வகுப்பு வரை இலவச கல்வி பெறும் RTE திட்டத்திற்கு நிதி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், RTE திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை பதிவு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே கல்வி கட்டணம் செலுத்தி இருந்தால் 7 நாட்களுக்குள் அதை திருப்பி அளிக்க வேண்டும். திருப்பி அளிக்கவில்லை என்றால் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் (அ) 14417 தொடர்பு கொண்டு புகார் செய்யலாம்.
Similar News
News October 3, 2025
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்.. வங்கியில் செம வாய்ப்பு!

கள்ளக்குறிச்சி மக்களே, கனரா வங்கியில் காலியாக உள்ள 3,500 Apprentices Training பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மட்டும் 394 பணியிடங்கள் உள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. அடிப்படை சம்பளமாக ரூ.15,000 முதல் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க<
News October 3, 2025
கள்ளக்குறிச்சி: பண்டிகைக்கு லீவு தரலையா?

தமிழ்நாடு தேசிய பண்டிகை விடுமுறை சட்டத்தின் படி ஆயுத பூஜை, காந்தி ஜெயந்தி போன்ற அரசு விடுமுறை தினங்களில் ஒவ்வொரு நிறுவனமும் ஊதியத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும். விடுமுறை தினத்தில் வேலை செய்தால் அதற்கு ஈடாக மாற்று தின விடுப்பு (அ) இரட்டிப்பு சம்பளம் தர வேண்டும். இவை தரவில்லை என்றாலோ (அ) சம்பளத்துடன் விடுப்பு தரவில்லை என்றாலோ மாவட்ட தொழிலாளர் நலவாரியத்தில் புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
News October 3, 2025
கள்ளக்குறிச்சி: விஜய தசமியை முன்னிட்டு மாணவர்சேர்க்கை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் நேற்று விஜயதசமி முன்னிட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் ஒன்றாம் வகுப்பு முதல் 8 ம் வகுப்பு வரை ஒன்றியம் வாரியாக தியாகதுருகம் 10 மாணவர்கள், திருநாவலுார் 9, திருக்கோவிலுார், சின்ன சேலம் தலா 8, கள்ளக்குறிச்சி, உளுந்துார்பேட்டை தலா 7, சங்கராபுரம் 2 என மொத்தம் 66 மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என சிஇஓ அலுவலகம் தெரிவித்துள்ளது.