News October 19, 2025

கள்ளக்குறிச்சி: காவல்துறை சார்பாக எச்சரிக்கை

image

திருக்கோவிலூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தீபாவளி பண்டிகையை பாதுகாப்பாக கொண்டாட வேண்டும் என டிஎஸ்பி பார்த்திபன் அறிவுறுத்தியுள்ளார். மேலும், தீபாவளி அன்று பொதுமக்களை பாதிக்கும் வகையில் இளைஞர்கள் வாகனங்களில் அதிவேகமாக செல்வதும், சாகசங்களில் ஈடுபடுவதுமாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Similar News

News October 21, 2025

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு ALERT!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 20.10.25 பரவலாக பல பகுதியில் மழை பெய்தது, அதனைத் தொடர்ந்து தற்போது சென்னை வானிலை மையம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு ஆரஞ்சு விடுத்துள்ளது. இதனால் பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியே செல்வது தவிர்க்கவும். மேலும் வெளியே செல்லும் மக்கள் குடை, ரெயின் கோர்ட் உள்ளிட்டவற்றை முன்னெச்சரிக்கையாக எடுத்து செல்லுங்கள். உங்கள் பகுதியில் மழை இருக்கா கமெண்ட் பண்ணுங்க.

News October 21, 2025

கள்ளக்குறிச்சி: மதுபான கடை முன்பு கைகலப்பு

image

சங்கராபுரம் அருகே உள்ள பாலப்பட்டு அரசு மதுபான கடையில் நேற்று பாலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும், அரசம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்களும் மோதிக்கொண்டனர். மதுபான கடை அருகே ஒருவருக்கு ஒருவரை சரமாரியாக தாக்கிக் கொண்டதால் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சங்கராபுரம் காவல் ஆய்வாளர் விநாயக முருகன், அவர்களிடம் விசாரணை செய்தனர். பின் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

News October 20, 2025

கள்ளக்குறிச்சி: 10th பாஸ் போதும்… கைநிறைய சம்பளம்

image

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 391 ஜென்ரல் டியூட்டி கான்ஸ்டபிள் பதவி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு 18 – 23 வயது வரை இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு <>இந்த இணையதளத்தில்<<>> வரும் நவ.04க்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!