News November 29, 2025
கள்ளக்குறிச்சி: கால் வலி தாங்காத நபர் விபரீத முடிவு!

திருப்பாலப்பந்தலைச் சேர்ந்த கன்னியப்பன் (43), 5 ஆண்டுகளுக்கு முன்பு, விபத்தில் சிக்கினார். அப்போது அவரது காலில் ஏற்பட்ட காயத்தால், இன்று வரை வலி அனுபவித்து வந்துள்ளார். இந்நிலையில், மனமுடைந்த கன்னியப்பன் சம்பவத்தன்று வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: அண்ணன் கூறிய வார்த்தையால் தம்பி விபரீத முடிவு!

கள்ளக்குறிச்சி: காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் சதீஷ்குமார் (31). இவரது தம்பி சுரேஷ்குமார் (26) தனியார் கேஸ் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், சுரேஷ்குமார் கறந்த பாலை எடுத்து செல்லாமல் போனை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். இதனால் அண்ணன் அவரை கண்டித்துள்ளார். இதில் மனமுடைந்த சுரேஷ்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: 2,147 செவிலியர் பணியிடங்கள்- நேர்காணல் இல்லை!

தமிழ்நாட்டில் காலியாக உள்ள 2,417 கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 18 வயது நிறைவடைந்த பெண்கள் இதற்கு விண்பிக்கலாம். இந்த பணிக்கு நேர்காணல் கிடையாது. மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கப்படும். மேலும், மாதம் ரூ.19,500 – ரூ.71,900 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<
News December 1, 2025
கள்ளக்குறிச்சி: பெட்ரோல் பங்க்கில் கைவரிசை.. சிறுவன் கைது!

உளுந்தூர்பேட்டை: மடப்பட்டு தனியார் பெட்ரோல் பங்க்கில் அய்யனார் என்பவர் பணியில் இருந்துள்ளார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் கேனில் பெட்ரோல் கேட்டுள்ளனர். அய்யனார் பெட்ரோல் போட்டுக்கொண்டிருந்த போது, அவரிடம் இருந்த கைப்பையை ரூ.2,800 பணத்துடன் பறித்துக்கொண்டு தப்பினர். இது குறித்த புகாரில் விசாரித்த போலீசார், தோட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (23) மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.


