News December 23, 2025
கள்ளக்குறிச்சி: கர்ப்பமான சிறுமி கணவன் மீது புகார்!

ரிஷிவந்தியதைச் சேர்ந்த 17 வயது சிறுமியும், தண்டராம்பட்டைச் சேர்ந்த ஸ்ரீமுருகனும் (30) காதல் திருமணம் செய்துள்ளனர். அதன்பிறகு, இரு குடும்பத்தினரும் ஏற்றுக்கொண்ட நிலையில், சிறுமி உடல்நலக் குறைவால் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பதை அறிந்த மருத்துவர்கள் கூறிய அறிவுரை படி முருகன், பெற்றோர்கள் மீது சிறுமி புகாரளித்தார். அதைத்தொடர்ந்து 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்
Similar News
News December 25, 2025
கள்ளக்குறிச்சியில் 25% மானியத்துடன் ரூ.10 லட்சம் கடன்!

கள்ளக்குறிச்சி பெண்களே.. யாரையும் எதிர்பார்க்காமல் சுயமாக சம்பாதித்து முன்னேற ஆசையா? உங்களுக்காக ‘ தமிழ்நாடு பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சம் 25% (ரூ.2 லட்சம் வரை) மானியத்துடன், ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் <
News December 25, 2025
கள்ளக்குறிச்சி: POLICE லஞ்சம் கேட்டால் உடனே CALL!

கள்ளக்குறிச்சி மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். இது குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04151-294600) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 25, 2025
கள்ளக்குறிச்சியில் மர்ம முறையில் ஆடுகள் உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி: மடத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார். இவரது பக்கத்து நிலத்துக்காரரான மாடூரைச் சேர்ந்த நாரயணசாமியுடன் அடிக்கடி வரப்பு தகறாறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், நாராயணசாமி பொது வரப்பில் களைக்கொல்லி மருந்து அடித்துள்ளார். அது ரஞ்சித்குமாரின் ஆடுகள் சாப்பிடும் தீவனம் மீது பட்டதாக கூறப்படுகிறது. அதை சாப்பிட்ட 4 ஆடுகளும் மயங்கி விழுந்து உயிரிழந்தன. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


