News January 1, 2026

கள்ளக்குறிச்சி: கர்ப்பமடைந்த காதலி – மிரட்டிய காதலன்!

image

பவுஞ்சிப்பட்டைச் சேர்ந்த அய்யனாரும் (29), 26 வயது இளம்பெண்ணும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அந்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு, திருமணம் செய்ய மறுத்து அய்யானாா் வெளிநாடு சென்றுவிட்டார். பின்னா் வீடு திரும்பிய அய்யனாா், அந்த பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரில் அய்யனார், அவரது குடும்பத்தினர் உட்பட 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.

Similar News

News January 2, 2026

பொங்கலுக்கு தயரான நெற்பயிர்கள்!

image

சின்னசேலம் வட்டாரத்துக்குட்பட்ட பகுதியில் கோமுகி அணை, ஏரி பாசனம், கிணற்றுப் பாசனம் மூலம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக இந்தப் பகுதியில் தண்ணீர் பற்றாக்குறை இல்லாததால் பெரும்பாலான விவசாயிகள் நெல் சாகுபடி செய்கின்றனர். மேலும் தற்போது புது நெல்லை அறுவடை செய்து பொங்கல் வைப்பதற்கு பெரும்பாலான வயல்களில் தயார் நிலையில் நெல் விளைச்சல் உள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

News January 2, 2026

கள்ளக்குறிச்சியில் மர்ம வேன் – மக்கள் பீதி!

image

சின்னசேலம் கூகையூர்ரோடு அருகே ஆம்னி வாகனம் ஒன்று கடந்த 10 நாட்களுக்கு மேலாக ஒரே இடத்தில் நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆம்னி வேன் யாருடையது? எதற்காக இங்கே நிற்கிறது? என்ற விவரம் முழுமையாக தெரியவில்லை. இந்த வாகனத்தை சின்னசேலம் போலீசார் பறிமுதல் செய்து, வாகனத்தின் உள்ளே என்ன இருக்கிறது என்று ஆய்வு செய்ய வேண்டும் என மக்கள் அச்சத்துடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

News January 2, 2026

கள்ளக்குறிச்சியில் மூதாட்டி அடித்து கொலை!

image

சின்னசேலம் அருகே வசித்து வரும் கன்னியம்மாளுக்கும் (70), அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (60) மனைவி வள்ளிக்கும் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஏற்பட்ட வாய்தகராறில், ராஜேந்திரன் ஊதாங்குழலால் கன்னியம்மாளை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவர், மருத்துவமனையில் வைத்து உயிரிழந்தார். இது குறித்த வழக்கில் ராஜேந்திரனை போலீசார் கைது செய்தனர்.

error: Content is protected !!