News September 19, 2025

கள்ளக்குறிச்சி: உடனடி தீர்வு எல்லாமே ஈஸி!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம்கள் நடைபெறுகின்றன. இதில், சாதி சான்றிதழ், பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, மருத்துவ காப்பீட்டு அட்டை, ஆதார், ரேஷன் அட்டை திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசு அலுவலகங்களுக்கு அலையாமல், இந்த <>லிங்கில்<<>> கிளிக் செய்து சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தெரிந்துகொண்டு, நேரில் சென்று விண்ணப்பித்து பயன் பெறுங்கள். ஷேர் பண்ணுங்க.

Similar News

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

image

கள்ளக்குறிச்சி நகராட்சியில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு நேற்று (செப். 18) மாலை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய வாழ்வாதாரக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சதீஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மாநில இணைச் செயலாளர் செல்வராஜ் மற்றும் மாவட்டச் செயலாளர் சிவகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: பழ பயிர் சாகுபடி அதிகரிக்க அறிவுறுத்தல்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்பட்ட மனுக்களுக்கு விரைந்து தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் தெரிவித்துள்ளார். மேலும், தோட்டக்கலைத் துறை மூலம் பழப் பயிர்கள் சாகுபடியை, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதலாக அதிகரிக்கச் செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

News September 19, 2025

கள்ளக்குறிச்சி: மழைக்காலத்தில் இது இருந்தால் போதும்!

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தினமும் கனமழை பெய்து வருகிறது. மரம் முறிந்து விழுவது, மின்கம்பங்கள் சாய்வது போன்ற இயற்கை இடர்பாடுகளினால் ஏற்படும் சேதங்கள் தொடர்பாக, மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் நீங்கள் புகார் செய்யலாம். அவசர கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 என்ற எண்ணில் பொதுமக்கள் தகவல்கள் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!