News December 18, 2025

கள்ளக்குறிச்சி: உங்கள் PAN Card-இல் இது கட்டாயம்!

image

கள்ளக்குறிச்சி, மக்களே, நமது அத்தியாவசிய தேவைகளை பெறுவதற்கு, நமக்கு PAN அட்டை தேவைப்படுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நேரடி வரிகள் வாரியம் (CBDT) டிச.31 ஆம் தேதிக்குள் பான் அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்க அறிவுறுத்தியுள்ளது. இதற்காக நீங்கள் நேரடியாக எங்கும் அலைய வேண்டியதில்லை. <>இந்த லிங்க்<<>> மூலம் உங்கள் ஆதார் அட்டை, PAN card உடன் இணைக்கப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News December 20, 2025

கள்ளக்குறிச்சி: சாமி கும்பிட வந்த மகனுக்கு பேரிழப்பு

image

சேலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (33), தாய் உண்ணாமலை-யுடன் (65) வாணாபுரத்தில் உள்ள கோவிலுக்கு பைக்கில் சென்றுள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு ஊர் திரும்பியபோது, வடபொன்பரப்பி அருகே வேகத்தடையில் நிலைத்தடுமாறி தாயும், மகனும் கீழே விழுந்தனர். இதில் 2 பேரும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு உண்ணாமலை உயிரிழந்தார். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

கள்ளக்குறிச்சி: கணவரை மிரட்டிய கள்ளக்காதலன்!

image

கள்ளக்குறிச்சியை சேர்ந்தவர் வரதன் (24). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையறிந்த பெண்ணின் கணவர் கண்டித்ததால், அந்த பெண் வரதனுடன் பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வரதன், பெண்ணின் கணவரை தொடர்பு கொண்டு, அவரது மனைவியுடன் இருந்த புகைப்படங்களை வெளியிடுவதாக கூறி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 20, 2025

கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி விவரம்

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.19) இரவு முதல் நாளை (டிச.20) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!