News January 25, 2026

கள்ளக்குறிச்சி இளைஞர்களுக்கு ஆட்சியர் நற்செய்தி!

image

கள்ளக்குறிச்சி மாடூர் இந்தியன் வங்கி பயிற்சி மையத்தில், 30 நாட்கள் நடைபெறும் விலையில்லா மொபைல் போன் பழுதுபார்ப்புப் பயிற்சிக்கு மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார். இதில் 18 முதல் 45 வயது வரையிலான இளைஞர்கள் பங்கேற்கலாம். இத்தொழில் முனைவோர் பயிற்சியைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகளைப் பெறுமாறு ஆட்சியர் இன்று தெரிவித்துள்ளார்.

Similar News

News January 27, 2026

கள்ளக்குறிச்சி: தவறாக அனுப்பிய Payment -ஐ இனி திரும்பப் பெறலாம்

image

செல்போன் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு இதை SHARE பண்ணுங்க.

News January 27, 2026

கள்ளக்குறிச்சியின் சிறந்த ஊராட்சிக்கு விருது!

image

வாணாபுரம் வட்டம் ரங்கப்பனூர் ஊராட்சி சிறந்த ஊராட்சியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி, டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்ற 77-வது குடியரசு தின விழாவில், குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பரிந்துரையின்படி, ஊராட்சி மன்றத் தலைவர் அர்ச்சனா காமராஜ்க்கு சிறந்த ஊராட்சிக்கான விருதை மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் லாலன் சிங் வழங்கிக் கௌரவித்தார்.

News January 27, 2026

கள்ளக்குறிச்சி: குளிரால் ஏற்படும் முகவாதம் -உஷார்!

image

கள்ளக்குறிச்சி உட்பட தமிழகம் முழுவதும் இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வருகிறது.குளிர்ந்த தரையில் படுத்து உறங்கினால் முகவாதம் நோய் வருவதற்கான சாத்திய கூறுகள் அதிகம் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. முகம் ஒரு பக்கம் தொங்குதல், சிரிக்க முடியாமை, கண் மூடுவதில் சிரமம், கண் வறட்சி அல்லது நீர் வடிதல், சுவை மாற்றம், காதுக்கு பின்னால் வலி, பேச்சில் தடுமாற்றம் இருந்தால் உடனே டாக்டரை அணுகுங்கள்.SHARE IT

error: Content is protected !!