News October 26, 2025

கள்ளக்குறிச்சி: இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் கடன்!

image

பிரதம மந்திரி ரோஸ்கர் யோஜனா (PMRY) திட்டம், 1993-இல் தொடங்கப்பட்டது. படித்த வேலையற்ற இளைஞர்கள் சுயதொழில் தொடங்க ரூ.10 லட்சம் வரை மானியக் கடன் வழங்குகிறது. உற்பத்தி, சேவை, வர்த்தகத் துறைகளில் கடன் வழங்கப்படும். 18-35 வயது வரையிலான, 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.15% வரை மானியமும், தொழில் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். மாவட்ட தொழில் மையங்கள் மூலம் <>விண்ணப்பிக்கலாம்<<>>.

Similar News

News February 11, 2026

அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வழங்கல்

image

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.2.25 லட்சம் மதிப்புள்ள உடலின் ரத்த ஆக்சிஜன் செறிவை அளவிடும் கருவிகள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டும் கருவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வு ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. அரசு மருத்துவர்களிடம் கள்ளக்குறிச்சி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சேர்மன் டாக்டர் பொன்னரசு இன்று வழங்கினார்.

News February 11, 2026

கள்ளக்குறிச்சி: இனி கேஸ் சிலிண்டர் முன்பதிவுக்கு இது கட்டாயம்!

image

கள்ளக்குறிச்சி மக்களே,கேஸ் புக்கிங்-ல் கள்ளச் சந்தையை தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் இ-கேஒய்சி மற்றும் ஓடிபி கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இ-கேஒய்சி இல்லையென்றால் கேஸ் புக்கிங் செய்ய முடியாது.
பாரத் கேஸ் : https://www.ebharatgas.com
இண்டேன் கேஸ்: https://cx.indianoil.in
ஹெச்.பி: https://myhpgas.in
கேஸ் எண் மற்றும் ஆதார் எண்ணை பதிவு செய்து e-KYC – ஐ உருவாக்குங்க. SHARE!

News February 11, 2026

கள்ளக்குறிச்சி: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*

error: Content is protected !!