News November 4, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு முதல் இன்று (நவ.4) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 4, 2025
க.குறிச்சி: ஆட்சியரகத்தில் தற்கொலை முயற்சி!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(நவ.3) பொதுமக்கள் குறைதீர்க்க கூட்டம் நடைபெற்றது. இதில் மனு அளிக்க வந்த மல்லாபுரத்தைச் சார்ந்த தர்மலிங்கம் என்பவர் சொத்துகளை கிரய ஆவணப்படி உட்பிரிவு செய்து, தனிப்பட்டாவாக மாற்ற வலியுறுத்தி பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
News November 4, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியரகத்தில் நல உதவி!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(நவ.3) உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பெற்ற மனுக்களின் அடிப்படையில் ஒருவருக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி, 2 பேருக்கு மடக்கு சக்கர நாற்காலி, 3 பேருக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரம், ஒருவருக்கு ஒளிரும் மடக்கு குச்சி மற்றும் செல்போன் என மொத்தம் 7 பேருக்கு 1.61 லட்சம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
News November 4, 2025
கள்ளக்குறிச்சியில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று(நவ.3) வாராந்திர மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் மகளிர் உரிமைத்தொகை, தெரு மின்விளக்கு அமைத்தல் உட்பட பல்வேறு கோரிக்கை தொடர்பாக பொதுமக்களிடமிருந்து 412, மாற்றுத்திறனாளி நபர்களிடமிருந்து 5 என மொத்தமாக 417 மனுக்கள் பெறப்பட்டது.


