News December 18, 2025
கள்ளக்குறிச்சி இரவு நேர ரோந்து பணி விவரம்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (டிச.17) இரவு முதல் நாளை (டிச.18) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News December 20, 2025
கள்ளக்குறிச்சி: விவசாயிகளுக்கு ரூ.31,500 மானியம்!

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன் மூலம், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.31,500 மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயனடைய விரும்பும் நபர்கள் <
News December 20, 2025
கள்ளக்குறிச்சி: மணி பர்ஸுக்காக கொலை மிரட்டல்!

கள்ளக்குறிச்சி: சித்தப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த முரளி என்பவர் தனது மணி பர்ஸை அப்பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் முன்பு தொலைத்துவிட்டார். இந்த நிலையில், தனது பர்ஸை அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி தான் எடுத்துள்ளார் எனக் கூறி, முரளி மற்றும் ராஜேஷ் சேர்ந்து பொன்னுசாமியை மிரட்டியுள்ளனர். இது குறித்த புகாரில் கொலை மிரட்டல் விடுத்ததாக 2 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News December 20, 2025
கள்ளக்குறிச்சி: சாமி கும்பிட வந்த மகனுக்கு பேரிழப்பு

சேலத்தைச் சேர்ந்த ரவிக்குமார் (33), தாய் உண்ணாமலை-யுடன் (65) வாணாபுரத்தில் உள்ள கோவிலுக்கு பைக்கில் சென்றுள்ளார். சாமி கும்பிட்டுவிட்டு ஊர் திரும்பியபோது, வடபொன்பரப்பி அருகே வேகத்தடையில் நிலைத்தடுமாறி தாயும், மகனும் கீழே விழுந்தனர். இதில் 2 பேரும் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு உண்ணாமலை உயிரிழந்தார். இது குறித்து வடபொன்பரப்பி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


