News January 12, 2026
கள்ளக்குறிச்சி: இனி ஆதார் வாங்க, HI போடுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை +91-9013151515 SAVE செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், அதுவே வழிகாட்டும். இதை உங்கள் நண்பர்கள் அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News January 30, 2026
கள்ளக்குறிச்சியில் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கல்!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் மஹாலில் ‘உலகம் உங்கள் கையில் திட்டத்தின்’ கீழ் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினிகளை வழங்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்துகொண்டு மடிக்கணினிகளை வழங்கினார். மேலும் இந்த நிகழ்வில் மகளிர் திட்டம் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.
News January 30, 2026
கள்ளக்குறிச்சி: போனில் இருக்க வேண்டிய முக்கிய எண்கள்

1.மனித உரிமைகள் ஆணையம் – 044-22410377
2.அரசு பேருந்து குறித்த புகார்கள் – 1800 599 1500
3. ஊழல் புகார் தெரிவிக்க – 044-22321090
4.குழந்தைகளுக்கான அவசர உதவி 1098
5.முதியோருக்கான அவசர உதவி -1253
6.தேசிய நெடுஞ்சாலையில் அவசர உதவி- 1033
7.பெண்கள் பாதுகாப்பு- 181 / 1091. இதனை ஷேர் பண்ணுங்க
News January 30, 2026
‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ !

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் அரசுப் பேருந்துகளில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
எம்.எஸ்.பிரசாந்த் இன்று (30.01.2026) பேருந்துகளில் ஒட்டி விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உள்ளிட்டப் பலர் இருந்தனர்.


