News April 12, 2024
கள்ளக்குறிச்சி: ஆணுறை விற்பதற்கு தடை கோரி மனு
கள்ளக்குறிச்சி ஆட்சியரிடம் இன்று திருநங்கைகள் ஆணுறை விற்பதை தடை செய்ய மனு கொடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த கூத்தாண்டவர் கோவிலில் சில திருநங்கைகள் தவறான வேலைகளில் ஆணுறைகள் விற்பதை ஏற்க முடியாத நிலையில் கூத்தாண்டவர் கோவிலில் பணிவிடை செய்து வரும் திருநங்கைகள் மாவட்ட ஆட்சியரிடம் பெண்கள் இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு உள்ளது. அதனால் கோவிலில் ஆணுறை விற்பதை தடை செய்ய மனு கொடுத்தனர்.
Similar News
News November 19, 2024
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரண வழக்கில் நாளை தீர்ப்பு
கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் நவம்பர் 20-ம் தேதி காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பிபாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 19, 2024
குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கல்
சங்கராபுரம் ஒன்றியத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 0-6 மாத குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் சங்கராபுரத்தில் இன்று வழங்கப்பட்டது. இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர், பேரூராட்சி தலைவர், கட்சி நிர்வாகிகள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கலந்து கொண்டனர்.
News November 19, 2024
ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்சியர் ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் பயனாளிகளின் விபரங்கள் மற்றும் கட்டுமான பொருட்களின் இருப்பு குறித்து ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.