News October 25, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பொதுத்துறை நிறுவனமான ஆவின் நிறுவனத்தின் பால் மற்றும் பால் உபொருட்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை விற்பனை செய்யவும் புதிய முகவர்கள் மற்றும் மொத்த விற்பனையாளர்களை நியமனம் செய்யவும், விற்பனை பிரதிநிதி 2 நபர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அறிவித்துள்ளார்.
Similar News
News November 6, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (நவ.5) இரவு முதல் இன்று (நவ.6) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
News November 5, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.2 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்!

கள்ளக்குறிச்சி: மணலூர்பேட்டை அருகே உள்ள முறுக்கம்பாடி காப்பு காட்டில் இன்று (நவ.5) உதவி ஆய்வாளர் ராமதாஸ் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பெங்களூரில் இருந்து ரூ.1,90,000 மதிப்புள்ள ஹான்ஸ் மற்றும் குட்கா பொருட்கள் விற்பனைக்காக கடத்தி வந்த சலீம் பாஷா மற்றும் ஹாஷிரா பேகம், மேகநாதன் என்பவரிடம் 182 கிலோ குட்கா பொருட்களை வழங்கியபோது 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
News November 5, 2025
கள்ளக்குறிச்சி மக்களே – இன்று இதை கண்டிப்பாக பண்ணுங்க!

ஐப்பசி பெளர்ணமி நாளான இன்று (நவ.5) மாலை 5 மணிக்கு மேல் உங்களின் வீடுகளிலோ அல்லது அருகாமையில் உள்ள கோயில்களிலோ 5,7,11,21,51 அல்லது 101 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் மண் அகல் விளக்குகளை ஏற்றுங்கள். இப்படி வழிபடுவது குடும்பத்திற்கு மன நிம்மதி மற்றும் சிறப்பு தரும். அதேபோல், இந்த விளக்குகளை குறைந்தது 2 மணிநேரம் எரியும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். ஷேர் பண்ணுங்க!


