News October 23, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசின் சார்பில் வரும் டிசம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவை புரிபவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக சேவை புரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
Similar News
News January 30, 2026
வங்கியாளர்கள் உடன் ஆட்சியர் ஆலோசனை!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான வங்கியாளர்கள் உடடான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம் மற்றும் அரசின் துறை சார்ந்த அதிகாரிகள், வங்கியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
News January 30, 2026
கள்ளக்குறிச்சி: புதிய டிஎஸ்பி பொறுப்பேற்பு

கள்ளக்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கள்ளக்குறிச்சி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக மனோகரன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் ஏற்கனவே விழுப்புரம் மாவட்ட பெண்களுக்கு எதிரான குற்றத் தடுப்பு பிரிவு டிஎஸ்பியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அவருக்கு காவல் ஆய்வாளர்கள் பலரும் நேரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
News January 30, 2026
மருத்துவமனையின் இறுதிக்கட்ட கட்டுமான பணி குறித்து ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகரப் பகுதியில், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை கட்டட பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளரும் கள்ளக்குறிச்சி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பொன் கௌதம சிகாமணி இன்று நேரில் பார்வையிட்டு கட்டுமானப் பணிகளின் நிலை குறித்து கேட்டறிந்தார்.


