News September 17, 2024
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 4-வது சுற்று கன்று வீச்சு நோய் தடுப்பூசி திட்டம் செப்டம்பர் 18-ம் தேதி முதல் அக்டோபர் 15-ம் தேதி வரை தொடர்ந்து 27 நாட்கள் நடைபெற உள்ளது. கால்நடை மருத்துவ குழுவினருக்கு ஒத்துழைப்பு அளித்து கால்நடைகளை வளர்க்கும் விவசாயிகள் தங்களது கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 20, 2024
சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் – அண்ணாமலை
கள்ளக்குறிச்சி விஷ சாராயம் மரணம் தொடர்பான வழக்கு விசாரணையில் மேல் முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News November 20, 2024
கள்ளக்குறிச்சி விவகாரம்: இபிஎஸ் வரவேற்பு
அதிமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் மரணங்கள் குறித்து சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது வரவேற்கத்தக்கது என்றும், இந்த வழக்கில் தமிழக அரசு மேல்முறையீடு செய்யக்கூடாது என்றும், சிபிஐ விசாரணை மூலம் உயிரிழந்த 67 பேருக்கும் உரிய நீதி கிடைக்கட்டும் என்றும், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
News November 20, 2024
கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்
கள்ளக்குறிச்சி அருகே விஷ சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தமிழ்நாடு சிபிசிஐடி விசாரித்து வந்துள்ளது.இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அதிமுக, பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி உத்தரவிட்டனர்.மேலும், வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.