News October 8, 2024
கள்ளக்குறிச்சி அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம்

உளுந்தூர்பேட்டை அருகே பாதூர் காந்திநகர் என்ற இடத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சங்கர் (விவசாயி). அந்த வழியாக சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் மோதி உயிரிழந்தார். விபத்தில் சிக்கி உயிரிழந்த சங்கரின் உடல் பிரேத பரிசோதனைக்காக விருதாச்சலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து இந்த விபத்து குறித்து விழுப்புரம் ரயில்வே காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Similar News
News December 11, 2025
கள்ளக்குறிச்சி: மர்மமான முறையில் மூதாட்டி உயிரிழப்பு!

கள்ளக்குறிச்சி, பயனூர் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மனைவி அஞ்சலை (68), கடந்த 8ம் தேதி இவர் ஈயனுார் பஸ்நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்ற போது, அஞ்சலை நிலை தடுமாறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, மூதாட்டி வழியிலேயே இறந்துவிட்டார். இது குறித்து வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
News December 11, 2025
கள்ளக்குறிச்சி: சிறுமி 2 மாதம் கர்ப்பம்.. 4 பேர் மீது வழக்கு!

கள்ளக்குறிச்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கு அதே பகுதியைச் சேர்ந்த 29 வயது வாலிபருடன் குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்னர் தற்போது சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளதாகவும், இது தொடர்பான புகாரில் குழந்தை திருமணம் செய்த சிறுமியின் கணவர் உட்பட நான்கு பேர் மீது கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று (டிச.10) வழக்கு பதிவு செய்தனர்.
News December 11, 2025
கள்ளக்குறிச்சி: இரவு ரோந்து காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (டிச.10) இரவு முதல் இன்று (டிச.11) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!


