News January 31, 2025
கள்ளக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

ரிஷிவந்தியம் அடுத்த அதையூர் சேர்ந்தவர் முபாரக்அலி (36). பெயிண்டரான இவர் காட்டுஎடையாரில் வீட்டில் பெயிண்ட் அடித்து கொண்டிருந்தார். அப்போது அவர் கையில் இருந்த அலுமினியத்தால் ஆன பெயின்ட் ரோலர், அருகில் சென்ற மின்கம்பி மீது உரசியதாக கூறப்படுகிறது. இதில் மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டார். முபாரக்அலியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
Similar News
News March 9, 2026
கள்ளக்குறிச்சி: ரூ.34,800 சம்பளத்தில் செவிலியர் வேலை!

எய்ம்ஸ்-ல் செவிலியர் அலுவலர்களுக்கான 2,551 காலிபணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு பி.எஸ்சி. (ஹானர்ஸ்) நர்சிங், பி.எஸ்சி. நர்சிங் அல்லது டிப்ளமோ நர்சிங் (டிஜிஎன்எம்) முடித்திருந்தால் போதும். இதற்கான சம்பளம் ரூ.34,800/- முதல் வழங்கப்படும். இந்தப் பணிக்கு இதற்கான கடைசி நாள்: மார்ச்.16. விண்ணப்பிக்க <
News March 9, 2026
FLASH: கல்வராயன் மலை அருகே சாக்கு பையில் சடலம்!

கள்ளக்குறிச்சி: கச்சிராயபாளையம் அருகே கல்வராயன் மலை அடிவாரத்தில் உள்ள மயம்பாடி ஆற்றில், கோணிப் பையில் கட்டப்பட்ட நிலையில் மூதாட்டி ஒருவரின் சடலம் இன்று கண்டெடுக்கப்பட்டது. கொல்லப்பட்டவர் யார்? கொலைக்கு என்ன காரணம்? என்பது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 9, 2026
கள்ளக்குறிச்சியில் 250 கோழிகள் இலவசம்!

கள்ளக்குறிச்சி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்புள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!


