News October 23, 2024
கள்ளக்குறிச்சி அருகே மின்னல் தாக்கி விவசாயி பலி

கள்ளக்குறிச்சி அருகே வரஞ்சரம் அடுத்த எஸ்.ஒகையூரை சேர்ந்தவர் பிச்சப்பிள்ளை,36; விவசாயி. பிச்சப்பிள்ளையும், அவரது மனைவி தையல்நாயகியும் நேற்று மாலை நிலத்திற்கு சென்றனர். ஈயனுார் பகுதியில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது. அதில், வரப்பில் நடந்து சென்ற பிச்சப்பிள்ளை மின்னல் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 27, 2025
ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (அக்.27) நடைபெற்றது. இதில் பட்டா, முதியோர் உதவித் தொகை, மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக ஏராளமான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் இன்று நேரடியாக தலைவர் வழங்கினர்.
News October 27, 2025
கள்ளக்குறிச்சி: ரூ.30,000 சம்பளத்துடன் அரசு வேலை

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் காலியாக உள்ள 348 எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி முடித்திருந்தால் போதும். ஆரம்பக்கட்ட சம்பளமாக ரூ.30,000 வழங்கப்படும். வயது வரம்பு: 20 முதல் 35-க்குள் இருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் அக்.29-ம் தேதிக்குள் <
News October 27, 2025
கள்ளக்குறிச்சி: G Pay / PhonePe / Paytm பயன்படுத்துவோர் கவனத்திற்கு!

கள்ளக்குறிச்சி மக்களே, இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE!


