News March 16, 2025

கள்ளக்குறிச்சியில் விண்ணப்பிக்கலாம்

image

கள்ளக்குறிச்சியில் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் பி.எம்., இண்டர்ஷிப் திட்டம் மூலம் வழங்கப்படும் இண்டர்ஷிப் பயிற்சிக்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தில் சேரும் மாணவர்களுக்கு மாதம் தோறும் 11 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். இதுதொடர்பான மேலும் விபரங்களை http://www.pminternship.mca.gov.in/ என்ற இணையமுகவரி மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 18, 2025

குளத்தில் மூழ்கி 9 வயது சிறுவன் பலி

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் முனிவாழை கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகன் சரத்குமார்( 9). அரசு நடுநிலைப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த இவர், அவரது நண்பருடன், அருகில் உள்ள குளத்தில் குளித்துள்ளனர். ஆழமான பகுதிக்கு சென்ற சரத்குமார் திடீரென நீரில் மூழ்கினார்.  அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே இறந்தார். ரிஷிவந்தியம் போலீஸ் விசாரிக்கின்றனர்.

News March 17, 2025

இரவு நேர ரோந்து பணி போலீசார் விவரம் வெளியீடு

image

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளின் பெயர் மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு மேற்கண்ட காவல்துறை அதிகாரிகளின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என்று மாவட்ட காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News March 17, 2025

தொழில் நிறுவனங்களை அதிகப்படுத்துவதற்கான ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் புதிதாக சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அதிகப்படுத்தி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை வாய்ப்பை உருவாக்க அரசுத்துறை அலுவலர்களுடன் இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் பிரசாந்த் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!