News January 11, 2026
கள்ளக்குறிச்சியில் ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 24, 2026
கள்ளக்குறிச்சியில் கரண்ட் தாக்கியதால் பரபரப்பு!

எலவனாசூர்கோட்டை மின் பகிர்மான கழகத்திற்கு உட்பட்ட கொட்டையூர் பகுதி, புகைப்பட்டியைச் சேர்ந்த சுந்தர் (28) என்பவர் பழுது சரிபார்ப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சுந்தர் மீது மின்சாரம் பாய்ந்ததில் படுகாயம் அடைந்தார். அங்குள்ள பொதுமக்கள் அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

கள்ளக்குறிச்சி: சிலிண்டர் வைத்திருப்போர் கவனத்திற்கு!

கேஸ் சிலிண்டருக்கு மானியம் வருகிறதா? என்பதை SMS அனுப்பி தெரிந்து கொள்ளலாம். இண்டேன் சிலிண்டர் பயன்படுத்துவோர் ‘REFILL’ என டைப் செய்து 77189 55555 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். பாரத் சிலிண்டர் பயன்படுத்துவோர் 18002 24344 என்ற எண்ணுக்கும், எச்.பி. சிலிண்டர் பயன்படுத்துவோர் 1906 என்ற எண்ணுக்கும் அனுப்பி தெரிந்து கொள்ளலாம். மேலும், UMANG என்ற App மூலமும் தெரிந்து கொள்ளலாம். ஷேர் செய்யுங்கள்