News December 31, 2025
கள்ளக்குறிச்சியில் பூட்டிய வீடுகள்தான் டார்கெட்!

கள்ளக்குறிச்சி: நயினார்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் – மாரியம்மாள் தம்பதியினர், நேற்று முன்தினம் வீட்டை பூட்டி, சாவியை மேல்பகுதியில் வைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டனர். திரும்பி பார்த்தபோது 6 கிராம் மோதிரம், 20 ஆயிரம், 145 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. மேலும் பக்கத்து வீடுகளில் இருந்தும் அரை பவுன் மோதிரம், ரூ 14,000 திருடு போனது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News January 5, 2026
கள்ளக்குறிச்சியில் துடிதுடித்து பலி!

திருநாவலூர் ஒன்றியம் காம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வந்த நீதிதாஸ் என்பவர் கடந்த ஜூன்.3 ஆம் தேதி சேலம் சாலை, ஆத்தூர் அருகே சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News January 5, 2026
கள்ளக்குறிச்சியில் மின் தடை!

சங்கராபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகளால் நாளை(ஜன.6) சங்கராபுரம், பாண்டலம், வட சிறுவள்ளூர், வடசெடீயந்தல், திம்மனந்தல், கிடங்குடையாம்பட்டு, ஆரூர், ராமராஜபுரம், பூட்டை, செம்பராம்பட்டு, அரசம்பட்டு, அரசராம்பட்டு, மஞ்சபுத்தூர், பொய்யாக்குணம், விரியூர், எஸ்.வி.பாளையம், எஸ்.குளத்தூர், மேலேரி, கீழப்பட்டு, தும்பை, கூடலூர் பகுதிகளில் காலை 9 – 2 மணி வரை மின் தடை. <
News January 5, 2026
புதுப்பட்டு பகுதிகளில் மின் தடை

புதுப்பட்டு, ரங்கப்பனூர், மூலக்காடு, கொடியனூர், பவுஞ்சிப்பட்டு, ஆணைமடுவு, லக்கிநாயக்கன்பட்டி, சேராப்பட்டு, இன்னாடு, புத்திராம்பட்டு, மல்லாபுரம், பாவளம், ராவுத்தநல்லூர், பிரம்மகுண்டம், புளியங்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 – மதியம் 2 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.


