News December 24, 2025
கள்ளக்குறிச்சியில் தொடரும் நாய்க்கடி சம்பவங்கள்!

கள்ளக்குறிச்சி: புதுப்பாலப்பட்டு செல்லும் சாலையில் 3 பள்ளிகள் உள்ளன. நேற்று வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். அப்போது, 1 மாணவி மற்றும் 3 மாணவர்களை அங்கு சுற்றிக்கொண்டிருந்த தெரு நாய் விரட்டி விரட்டி கடித்தது. இதில் 4 பேரும் காயமடைந்துள்ளனர். சங்கராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் மட்டும் கடந்த 2 நாட்களில் தெரு நாய் கடித்து 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Similar News
News December 25, 2025
கள்ளக்குறிச்சி: 12th PASS – ரூ.1,05,000 சம்பளத்தில் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே, இந்தியன் ஆயில் நிறுவனத்தில் காலியாக உள்ள 394 Non Executive பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளன. இதற்கு 18 – 26 வயதுகுட்பட்ட 12th, டிப்ளமோ, B.Sc டிகிரி முடித்தவர்கள் வருகிற ஜன.9ம் தேதிக்குள் <
News December 25, 2025
கள்ளக்குறிச்சி: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே <
News December 25, 2025
உண்டியல் திருடனை கையும் களவுமாக பிடித்த கிராமத்தினர்!

கள்ளக்குறிச்சி: ஸ்.குளத்தூர் ஆறுபடை முருகன் கோயில் வராண்டாவில், நேற்று கோயில் பூசாரியின் மகன் மணிபிரபாகரன் படுத்து உறங்கியுள்ளார். அப்போது திடீர் சத்தம் கேட்ட நிலையில், கோயில் உண்டியலை எடுக்க முயன்ற புத்திராம்பட்டை சேர்ந்த ராஜாவை பார்த்து மணிபிரபாகரன் சத்தம் போட்டுள்ளார். அவரது சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், ஓடி வந்து ராஜாவை கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைந்தனர்.


