News February 15, 2026

கள்ளக்குறிச்சியில் துணிகர கொள்ளை!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் குளத்து மேட்டு தெருவில் இலான் கஃபார் கான் என்பவரின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த கல்சர் 5 பவுன் பிரேஸ்லைட் 2 பவுன் நெக்லஸ் 3 பவுன் என 10 பவுன் நகை காணவில்லை. என சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் ஏற்ற சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News

News February 18, 2026

கள்ளக்குறிச்சியில் EB பில் எகிறுதா..?

image

கள்ளக்குறிச்சி மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<> இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ‘Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

News February 18, 2026

கள்ளக்குறிச்சி: மனைவியை கத்தியால் கிழித்த கணவர்

image

கள்ளக்குறிச்சி, பீளமேட்டை சேர்ந்தவர் அப்துல்ஜப்பார் (50), அவரது மனைவி பாத்திமா (45) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக பாத்திமா கணவரை பிரிந்து வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் பாத்திமாவை அப்துல்ஜப்பார் ஆபாசமாக திட்டி கத்தியால் கிழித்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் அப்துல்ஜப்பார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

News February 18, 2026

கள்ளக்குறிச்சி: சிறுமியை கர்ப்பமாக்கியவர் கைது

image

சின்னசேலம், அம்மையகரம் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜன் மகன் விக்னேஷ் (26), இவரும் தியாக துருகம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியும் திருமணம் செய்து கொண்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து மகளிர் ஊர்நல அலுவலர் குப்புவள்ளி விசாரித்தபோது, தற்போது சிறுமி 6 மாத கர்ப்பமாக இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷ் மீது, அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!