News August 8, 2024
கள்ளக்குறிச்சியில் கொட்டித் தீர்த்த கனமழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. பகலில் வெயில் அடித்து வந்த நிலையில், சின்னசேலம், சங்கராபுரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இரவு முழுவதும் பெய்தது. இதனால், வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. தாழ்வான பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீர் ஆறாக ஓடியதால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் சிரமத்துக்கு உள்ளாகினர். உங்கள் பகுதியில் மழை பெய்ததா?
Similar News
News December 15, 2025
கள்ளக்குறிச்சி: தகராற்றில் 8 பேர் மீது வழக்கு

தியாகதுருகம் அருகே சாத்தப்புத்தூரை சேர்ந்த சகோதரர்களான பரசுராமன் அருள் ஆகியோரிடையே சொத்துத் தகராற்றில் முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று, பொதுக் கிணற்றில் தண்ணீர் இறைப்பது தொடர்பாக இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதைத் தொடர்ந்து, இருவரும் அளித்த புகார்களின் பேரில், 8பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, பரசுராமன்&அருள் ஆகியோரை கைது செய்தனர்.
News December 15, 2025
கள்ளக்குறிச்சி: டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே சேந்தமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (டிச.14) இரவு 11 மணியளவில் டேங்கர் லாரி சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.