News June 5, 2024

கள்ளக்குறிச்சியில் கனமழைக்கு வாய்ப்பு

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளை 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News July 8, 2025

ஆட்சியரகத்தில் நடைபெற்ற மாதாந்திர ஆய்வு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மகளிர் திட்டத்தின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மாதாந்திர ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று (ஜூலை 8) நடைபெற்றது. இதில் மகளிர் திட்ட இயக்குநர் மற்றும் அரசு துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

News July 8, 2025

210 கிலோ ஹான்ஸ் கடத்தல்: 3 பேர் கைது!

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் நயினார்பாளையம் பகுதியில் இன்று, தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 210 கிலோ ஹான்ஸ் மூட்டைகளை காரில் கடத்தி வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த சுக்காராம், தோராம் மற்றும் விஜய் பால் ஆகிய மூன்று பேரை கீழ்குப்பம் போலீசார் கைது செய்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 14 சாக்கு மூட்டைகளில் இருந்த ஹான்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது.

News July 8, 2025

கள்ளக்குறிச்சியில் கிராம, பகுதி, சமுதாய செவிலியர் ஆர்ப்பாட்டம்

image

தமிழகத்தில் 3,800 துணை சுகாதார நிலையங்களில் உள்ள கிராம சுகாதார செவிலியர் காலி பணியிடங்களை நிரப்பக் கோரி கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு செவிலியர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவி சாந்தி, தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் ஜோதி இருதயமேரி முன்னிலை வகித்தார். மாநில செயலாளர்களான சுசீலா (பகுதி சுகாதார செவிலியர் சங்கம்), உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

error: Content is protected !!