News November 18, 2024
கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 4 பேர் கைது

கள்ளக்குறிச்சி கவரைத்தெருவில் உள்ள வீட்டின் முன்பு உள்ள புதர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருந்த பெத்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த விஜயவர்மன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த முகமது அத்தீப், சையத் ஷாநாவஸ், மல்லாபுரம் பகுதியை சேர்ந்த அஜித்குமார் ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்து அவர்களிடம் இருந்து 1086 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Similar News
News April 9, 2026
கள்ளக்குறிச்சி 250 கோழிகள் இலவசம்!

கள்ளக்குறிச்சி மக்களே.. தமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை சார்பில் நாட்டு கோழி பண்ணை அமைக்க மானியம் வழங்கும் திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாட்டுக் கோழி வளர்ப்புப் பண்ணை அமைக்க மொத்த செலவில் 50% மானியம், 250 கோழிகள் இலவசமாக வழங்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள், அருகில் இருக்கும் கால்நடை மருத்துவமனை அல்லது கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!
News April 9, 2026
கள்ளக்குறிச்சி: 9445030725 இந்த நம்பரை SAVE பண்ணிக்கோங்க!

கள்ளக்குறிச்சி மக்களே அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவை இனி Whatsapp மூலமாக பெறும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 9445030725 என்ற எண்ணை சேமித்து ‘Hi’ என அனுப்பவும். பிறகு Book Ambulance-ஐ தேர்வு செய்து send Location என கிளிக் செய்து Location-னை பகிரவும். கட்டுப்பாட்டு மையம் தொடர்புகொண்டு ஆம்புலன்ஸ் தகவலை வழங்கும். உயிருக்கு போராடும் நேரத்தில், லொகேஷன் தெரியாமல் அலைய வேண்டிய தேவையே இருக்காது. ஷேர்!
News April 9, 2026
வீடு வீடாக தேர்தல் அழைப்பிதழ் விநியோகம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி, SVEEP திட்டத்தின் கீழ் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இன்று (08.04.2026) அதிகாரிகள் வீடு வீடாகச் சென்று, ஜனநாயகக் கடமையை நிறைவேற்றக் கோரி இந்த விழிப்புணர்வு அழைப்பிதழ்களை வழங்கினர்.


