News September 29, 2024

கள்ளக்குறிச்சியில் ஒரே நாளில் 675 பேருக்கு பணி நியமன ஆணை

image

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில் உள்ள அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று 103 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்ட வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 1375 பெண்களும், 2417 ஆண்களும் கலந்து கொண்டனர். நேர்முகத் தேர்வில் 241 பெண்களும், 5 மாற்றுத் திறனாளிகளும், 429 ஆண்களும் வெற்றி பெற்றனர். மொத்தமாக 675 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 20, 2024

கள்ளச்சாராய வழக்கு சிபிஐக்கு மாற்றம்

image

கள்ளக்குறிச்சி அருகே விஷ சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை தமிழ்நாடு சிபிசிஐடி விசாரித்து வந்துள்ளது.இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அதிமுக, பாமக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை இன்று விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி உத்தரவிட்டனர்.மேலும், வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிஐயிடம் சமர்ப்பிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News November 20, 2024

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கில் இன்று தீர்ப்பு

image

கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணம் தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக்கோரி அதிமுக மற்றும் பாமக சார்பில் தொடரப்பட்ட வழக்கில் இன்று (20-11-2024) காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், பி.பிபாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டவர்கள் இறந்தது குறிப்பிடத்தக்கது.

News November 20, 2024

கள்ளக்குறிச்சி ஆட்சியர் உத்தரவு

image

திருக்கோவிலூர் சார்- ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய் துறை சார்பில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் னால திட்ட உதவிகள், கோரிக்கை மனுக்களின் மீதான நிலை குறித்து கள்ளக்குறிச்சி ஆட்சியர் பிரசாந்த் ஆய்வு மேற்கொண்டார்.அலுவலகத்தில் உள்ள நீண்டகால கோப்புகள், தற்போது பராமரிக்கப்படும் பதிவேடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.பொதுமக்களின் முக்கிய மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.