News February 15, 2026
கள்ளக்குறிச்சியில் இளைஞர் துடி துடித்து பலி!

சின்னசேலம் அருகே வான கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் நடேசன் (37). இவர் திருமணமானவர். இரண்டு பிள்ளைகள் உண்டு. இந்நிலையில் இன்று மதியம் தன் நண்பர் குமாரை பார்க்க நடேசன் சென்றுள்ளார். அப்போது கிணற்றில் பைப்லைன் வேலை செய்து கொண்டிருந்த குமாரிடம் பேசிக் கொண்டிருந்தபோது தவறி விழுந்து இறந்துவிட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News February 17, 2026
கள்ளக்குறிச்சி: அனைத்து CERTIFICATES-ம் இனி Whatsapp-ல்!

கள்ளக்குறிச்சி மக்களே.., பிறப்பு சான்றிதழ், வீட்டு வரி, குடிநீர் வரி, இறப்பு சான்றிதழ் உள்ளிட்ட 50 வகையான அரசு சேவைகள் மற்றும் சான்றிதழ்களை வீட்டிலிருந்தே பெறும் வசதியை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. எங்கேயும் அலையாமல், வீட்டில் இருந்தே 7845252525 என்ற WHATSAPP எண்ணிற்கு ஒரு HI மட்டும் அனுப்பி, இந்த சேவைகளைப் பயன்படுத்தலாம். நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News February 17, 2026
குரூப் ‘டி’ தேர்வு – ஆட்சியர் அறிவிப்பு!

கள்ளக்குறிச்சி: ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (ஆர்.ஆர்.பி) குரூப் டி எழுத்து தேர்வு குறித்த வழிகாட்டுதல் நிகழ்ச்சி மற்றும் இலவச பயிற்சி வகுப்புகள் வரும் பிப்ரவரி 24-ம் தேதி நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில், காலை 11 மணியளவில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் இன்று அறிவித்துள்ளார்.
News February 17, 2026
கள்ளக்குறிச்சி: பம்புசெட்டு அமைத்தால், இது இலவசம்!

கள்ளக்குறிச்சி மக்களே, தமிழ்நாடு அரசு, ‘முதலமைச்சரின் சூரிய சக்தி பம்புசெட்டுகள் திட்டத்தின்’ கீழ் விவசாயிகளுக்கு 70% மானியத்தில் சோலார் பம்புசெட்டுகளை வழங்குகிறது. அத்துடன், 5 ஆண்டுகளுக்கு இலவச பராமரிப்பு, காப்பீட்டு வசதியும் செய்து தரப்படும். இதில் பயனடைய விரும்பும் நபர்கள், இங்கு <


