News September 7, 2025
கள்ளக்குறிச்சியில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று (செப்.,6) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
Similar News
News September 7, 2025
கள்ளக்குறிச்சி : தெரு நாய்கள் தொல்லையா? இதை பண்ணுங்க!

கள்ளக்குறிச்சி மக்களே, நமது மாவட்டத்தில் உள்ள முக்கிய நகராட்சி அலுவலகங்களின் எண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை, குப்பைகள் அகற்றப்படவில்லை, குடிநீர் வரவில்லை, சாலை, மேம்பாலம் சேதம் உள்ளிட்ட பிரச்னைகளை தெரிவித்து தீர்வுகளை பெறலாம்.
▶️ கள்ளக்குறிச்சி – 7397389324
▶️ திருக்கோவிலூர் – 9150375126
▶️ உளுந்தூர்பேட்டை – 9150375126
நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க
News September 7, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

கள்ளக்குறிச்சி மாவட்டம், அரியலூரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ முகாமில், 33 பேருக்கு மருத்துவச் சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டையை, கலெக்டர் பிரசாந்த் வழங்கினார். மேலும், 8 மாற்றுத்திறனாளிகள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 43 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்குவதற்காகப் பதிவு செய்யப்பட்டது.
News September 7, 2025
கள்ளக்குறிச்சி: ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு

கள்ளக்குறிச்சி மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க