News April 19, 2025
கள்ளக்குறிச்சியில் இன்று இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வரும் நிலையில், இன்று 29 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. எனவே இன்று வெளியில் வேலைக்கு செல்வோர் மற்றக்காமல் குடை அல்லது ரெயின் கோர்ட் எடுத்து செல்லவும். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 8, 2025
கள்ளக்குறிச்சி: விபத்தில் சிக்கி 3 பேர் பலி

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மஹால் பகுதியில் நேற்று கொய்யாக்காய் ஏற்றி சென்ற மகேந்திரா பிக்கப் வாகனத்தை இருசக்கர வாகனத்தில் முந்தி செல்ல முயன்ற போது திடீரென நிலைதடுமாறி கீழே விழுந்ததில் நாககுப்பத்தை சேர்ந்த தினேஷ், வெங்கடேஷ் ,சிவசக்தி மூவரும் திடீரென நிலைதடுமாறி விழுந்ததில் மகேந்திர பிக்கப் வாகனம் மோதியதில் மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
News August 7, 2025
கள்ளக்குறிச்சி ஆட்சியர் புதிய அறிவிப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குரு விவசாயிகளுக்கு புல் நறுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 90 பயனாளிகளுக்கு 13 லட்சத்து 5360 ரூபாய் மதிப்பீட்டில் மின்சாரத்தால் இயங்கும் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் பிரசாத் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
News August 7, 2025
கள்ளக்குறிச்சி: பித்ருக்கள் சாபம், கடன் தொல்லை நீங்க இங்க போங்க

கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரத்தில் பழமையும், பெருமையும் வாய்ந்த சிவன் கோவில் அமைந்துள்ளது. இக்கோயிலின் சிறப்பாக 4வகை வேதங்களையும், சிவன் காத்து வருவதற்கு அடையாளமாக நான்கு நந்திகள் உள்ளன. பித்ருக்கள் சாபம், பித்ருக்கள் தோஷம் உடையவர்கள் வீரசோழபுரம் சிவனை தரிசித்து பிரார்த்தனை செய்தால் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. கடன் தொல்லைகள் நீங்கி செல்வம் பெருகும் எனது ஐதீகமாக இருக்கிறது. ஷேர்