News February 11, 2026
கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

கச்சிராயப்பாளையத்தில் ஒருவர் வீட்டில் பதுக்கி வைத்து மது விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகாதேவன்(42) என்பவரின் வீட்டில் மது பாட்டில்கள் பதுக்கி வைத்த படி விற்பனையாவது தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்த பது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
Similar News
News February 15, 2026
கள்ளக்குறிச்சி: தேர்வு இல்லாமல், INDIA POST-ல் வேலை!

கள்ளக்குறிச்சி மக்களே.., தமிழ்நாடு அஞ்சல் துறையில் காலியாக உள்ள 2009 காலியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு 10-வது படித்திருந்தாலே போதுமானது. எந்தத் தேர்வும் எழுத அவசியமில்லை. மாதம் ரூ.29,380 வரை சம்பளம் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க நாளை (பிப்.16) கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் <
News February 15, 2026
கள்ளக்குறிச்சி: SBI வங்கியில் வேலை வேண்டுமா..? APPLY NOW

SBI வங்கியில் காலியாக உள்ள ‘Circle Based Officer( CBO)’பணிக்கு ஆட்கள் தேர்வு நடைபெறுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ.48,000 முதல் சம்பளம் வழங்கப்படும். ஆன்லைன் தேர்வு, நேர்காணல் மூலம் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். இதற்கு விண்ணப்பிக்க பிப்.25ஆம் தேதியே கடைசி நாள்.விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க<
News February 15, 2026
கள்ளக்குறிச்சியில் துணிகர கொள்ளை!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் குளத்து மேட்டு தெருவில் இலான் கஃபார் கான் என்பவரின் வீட்டில் பீரோவில் வைக்கப்பட்டிருந்த கல்சர் 5 பவுன் பிரேஸ்லைட் 2 பவுன் நெக்லஸ் 3 பவுன் என 10 பவுன் நகை காணவில்லை. என சங்கராபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகார் ஏற்ற சங்கராபுரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


