News January 12, 2026
கள்ளக்குறிச்சியில் அதிரடி கைது!

சங்கராபுரம் இன்ஸ்பெக்டர் விநாயகமுருகன் தலைமையிலான போலீசார் நேற்று(ஜன.11) பரமநத்தம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த நபரை போலீசார் விசாரித்தனர். அதில், அவர் தியாகதுருகம் அடுத்த திம்மலை கிராமத்தைச் சேர்ந்த முருகன்(37) என்பதும், பல்வேறு பெண்களிடம் சுமார் 11.5 சவரன் தங்க நகைகளைப் பறித்துச் சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து, அவரைக் கைது செய்தனர்.
Similar News
News January 30, 2026
‘போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு’ !

கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்தில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையின் சார்பில் அரசுப் பேருந்துகளில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு ஒட்டு வில்லைகளை மாவட்ட ஆட்சித்தலைவர்
எம்.எஸ்.பிரசாந்த் இன்று (30.01.2026) பேருந்துகளில் ஒட்டி விழிப்புணர்வு நடவடிக்கைகளைத் தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.அரவிந்த் உள்ளிட்டப் பலர் இருந்தனர்.
News January 30, 2026
SP தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்பு!

இந்திய சுதந்திர போராட்டத்தில் இன்னுயிர் நீத்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 30-ஆம் தேதி தியாகிகள் தினமாக கடைபிடிக்கப்பட்டும். அந்நாளில் தீண்டாமையை ஒழிக்க உறுதிமொழி எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது.
News January 30, 2026
கள்ளக்குறிச்சி: டிகிரி போதும்., விவசாய வங்கியில் வேலை ரெடி!

கள்ளக்குறிச்சி மக்களே, தேசிய விவசாய – கிராம வளர்ச்சி வங்கியில் (NABARD) பல்வேறு பணிகளுக்கு 162 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <


