News January 15, 2026
கள்ளக்குறிச்சி:பொங்கலுக்கு பொருட்கள் வாங்குவோர் கவனத்திற்கு!

பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் கடைகளில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். வாங்கிய பொருட்களை கடை உரிமையாளர் மாற்றி தரவோ, பணத்தை திருப்பி தரவோ மறுத்தால் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புகார் அளிக்கலாம். 15 நாட்களுக்குள் சேதமின்றி இருந்தால் மாற்றம் அல்லது பணம் திரும்ப வழங்க வேண்டும். விவரங்களுக்கு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரை 044-28589055ல் தொடர்பு கொள்ளலாம்.
Similar News
News February 5, 2026
கள்ளக்குறிச்சியில் நாளை மின் தடை!

கள்ளக்குறிச்சி அடுத்த மூங்கில்பாடி துணை மின் நிலையத்தில் நாளை(பிப்.6) பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ராயப்பனூர், மேல்நாரியப்பனூர், மரவனந்த்தம், பாண்டியன் குப்பம், திம்மாபுரம், நகரை, நாகுப்பம், கல்லாநத்தம், எலவடி, பூண்டி, செல்லியம்பாளையம், சமத்துவபுரம், தென்பொன்பரப்பி, மூங்கில்பாடி, பூசப்பாடி, அம்மையகரம் பகுதிகளில் நாளை(பிப்.6) காலை 9:00 – மதியம் 2:00 வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது
News February 5, 2026
சங்கராபுரத்தில் சிறுமியை திருமணம் செய்த வாலிபர்!

கள்ளக்குறிச்சி; சங்கராபுரம் பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் மணிகண்டன். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் கடந்த நவம்பர் மாதம் திருமணம் செய்துகொண்டனர். இதுகுறித்து சங்கராபுரம் மகளிர் ஊர் நல அலுவலகத்திற்கு புகார் சென்றது. இதையடுத்து, இதுகுறித்த விசாரணையில் சிறுமி 2 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. இந்நிலையில், 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
News February 5, 2026
சங்கராபுரம் அருகே 2 பைக்குகள் மோதி விபத்து!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள மயிலாம்பாறை கிராமத்தில், மஞ்சபுத்தூர் கிராமத்தைச் சார்ந்த ராஜா என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது பின்னல் வந்த குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மோதியத்தில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


