News February 3, 2026
கள்ளக்குறிச்சிக்கு புது பஸ் ஸ்டாண்ட் வந்தாச்சு!

ஏமப்பேர் ரவுண்டானா அருகே அமைக்கப்பட்டுள்ள புதிய புறநகர் பஸ் நிலையத்தை அமைச்சர்கள் இன்று(பிப்.3) திறந்து வைக்கின்றனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் வந்து செல்லும் நிலையில், இந்த புற நகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது அமைக்கப்பட்டுள்ள இந்த பஸ் ஸ்டாண்ட் மக்களுக்கு பயனுள்ளதாக அமையுமென எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News February 20, 2026
கள்ளக்குறிச்சி: போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடி கைது

திருக்கோவிலூர் , காட்டுப்பையூர் சேர்ந்த தண்டபாணி மகன் பரத்ராஜ் (வயது 21). இவர் கடந்தாண்டு மார்ச் மாதம் திருக்கோவிலூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து, வாழ்ந்து வந்த நிலையில் சிறுமி 8 மாத கர்ப்பமானாள். இதையடுத்து பரிசோதனைக்கு சென்றபோது, சிறு மிக்கு 17 வயது ஆவது உறுதி செய்யப்பட்டது. அதன்பேரில் பரத்ராஜ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 19, 2026
முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் இன்று முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் கலந்து கொண்டு முன்னாள் படை வீரர்களின் கோரிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்து, தொடர்ந்து முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவரது வாரிசுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
News February 19, 2026
கள்ளக்குறிச்சி: வீடு தேடி வரும் புதிய ரேஷன் கார்டு!

கள்ளக்குறிச்சி மக்களே, புது ரேஷன் கார்டு வேணுமா? இதற்கு விண்ணப்பிக்க உங்க போன் போதும். இங்கு <


