News November 25, 2025
கள்ளக்குறிச்சி:இரவு நேர ரோந்து பணி விவரங்கள்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று (நவ.24) இரவு முதல் நாளை (நவ.25) காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் பொதுமக்கள் தங்கள், அவசர தேவைகளுக்கு மேற்கண்ட பட்டியலில் உள்ளவர்களில், உங்கள் அருகாமையில் உள்ள அதிகாரிகளுக்கோ, 100 என்ற எண்ணுக்கு அழைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தெரிந்த பெண்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 27, 2025
கள்ளக்குறிச்சி உழவர் சந்தையின் இன்றைய நிலவரம்!

கள்ளக்குறிச்சி உழவர் சந்தையில் இன்று (நவ.27) காய்கறிகளின் விலை நிலவரம் ஒரு கிலோ மதிப்பீட்டில் தக்காளி ரூ.60, கத்தரி ரூ.60, அவரை ரூ.80, வெண்டை ரூ.50, கொத்தவரை ரூ.50, புடலங்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, முருங்கை ரூ.100, முள்ளங்கி ரூ.40, பிரண்டை ரூ.60, மாங்காய் ரூ.60, பச்சை மிளகாய் ரூ.50, பரங்கி ரூ.20 என விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 27, 2025
கள்ளக்குறிச்சி: சிசிடிவி பழுது.. போலீசார் திணறல்!

உளுந்துார்பேட்டை பகுதியில் போலீசார் அமைத்த சிசிடிவி கேமராக்கள்பராமரிப்பு இன்றி பழுதாகி கிடப்பதால், திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம ஆசாமிகளை அடையாளம் காண முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்களும், பல்லாயிரக்கணக்கான பொதுமக்களும் வந்து செல்லும் முக்கிய பகுதியில், பைக் திருட்டு, வீடு, கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.
News November 27, 2025
கள்ளக்குறிச்சி மக்களுக்கு ஒர் முக்கிய அறிவிப்பு!

திருக்கோவிலுார், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், உளுந்தூர்பேட்டை ஆகிய நீதிமன்ற வளாகங்களில் வரும் டிசம்பர் 13ம் தேதி தேசிய அளவில் லோக் அதாலத் எனும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடக்கிறது. இதில், நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், காசோலை தொடர்பான வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள் விசாரித்து சமரசமாக முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


