News March 31, 2024
களப்பணியாற்ற மாா்க்சிஸ்ட் கம்யூ. முடிவு

பெரம்பலூா் துறைமங்கலத்தில் உள்ள மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில், மாவட்ட சிறப்பு பேரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.கூட்டத்துக்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினா் செல்லதுரை தலைமை வகித்தாா். இதில் பெரம்பலூா், சிதம்பரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா்களுக்கு தீவிர களப்பணியில் ஈடுபடுவது என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவு செய்துள்ளது.
Similar News
News August 14, 2025
பெரம்பலூர் மக்களே.. ரூ.5 லட்சத்தில் இலவச காப்பீடு!

பெரம்பலூர் மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டையை பெற எளிய வழி, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு மருத்துவ அடையாள அட்டை உடனே பதிவு செய்து பெற முடியும். மேலும் ஆட்சியர் அலுவலகத்திலும் பதிவு செய்து பெறலாம். SHARE IT NOW!
News August 14, 2025
பெரம்பலூர் மாவட்டத்தில் நாளை டாஸ்மாக் விடுமுறை

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு வெயிட்டுள்ளார். அதில், பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் டாஸ்மாக்யின் அனைத்து அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள், மதுபான சில்லறை விற்பனை கடைகளுடன் இணைந்த மதுகூடங்கள் மற்றும் FL3 உரிமம் பெற்ற தனியார் மதுபான கூடங்கள் ஆகிய அனைத்திற்கும், சுதந்திர தினத்தை முன்னிட்டு, நாளை ஒருநாள் மட்டும் உலர் தினமாக விடுமுறை அறிவிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
News August 14, 2025
பெரம்பலூர்: VAO லஞ்சம் கேட்டால் உடனே புகார் அளியுங்கள்!

பயிர்களை ஆய்வு செய்வது, பிறப்பு, இறப்பு, திருமணத்தை பதிவு செய்வது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா மாறுதல், சிட்டா சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை கிராம நிர்வாக அலுவலரின் (விஏஓ) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் விஏஓ யாரேனும் உங்களிடம் லஞ்சம் கேட்டால், பெரம்பலூர் மாவட்ட மக்கள் 04328-296407 என்ற எண்ணில் தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!