News April 16, 2025
கல்வி செலவை அரசே ஏற்கும் – புதுவை முதல்வர்

புதுவையில் மீன் வளம் மற்றும் மீனவ நலத்துறை விழாவில் இன்று புதுச்சேரி முதல்வர் பங்கேற்றார். அதில், மீனவ இன மாணவ மாணவிகளுக்கான கல்விச் செலவை முழுமையாக அரசு ஏற்கும் எனும் புதிய அறிவிப்பை புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார்.
Similar News
News November 5, 2025
புதுச்சேரி: பணி ஆணை வழங்கிய முதல்வர்

புதுச்சேரி மற்றும் காரைக்கால் வட்டாரப் பகுதியில் உள்ள பல்வேறு குற்றவியல் நீதிமன்றங்களில், வழக்குகளை நடத்த ஐந்து உதவி அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள், ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டதற்கான பணி ஆணைகளை, முதலமைச்சர் ரங்கசாமி சட்டபேரவை அலுவலகத்தில் இன்று வழங்கினார். இந்த ஆணையானது துணைநிலை ஆளுநரின் ஆணைப்படி வெளியிடப்பட்டது.
News November 4, 2025
புதுச்சேரி: ஆடு, கோழி பண்ணை அமைக்க விருப்பமா?

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும், தொழில்முனைவு வாய்ப்புகளை அதிகரிக்கவும் அரசு கொண்டுவந்துள்ள ஒரு சூப்பர் திட்டம் தான் உத்யமி மித்ரா. இத்திட்டத்தின் கீழ் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடை பண்ணைகள் அமைக்க ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் <
News November 4, 2025
புதுச்சேரியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், “புதுச்சேரி பகுதியில் பொதுமக்களுக்கு இடையூராக உள்ள சாலையோர ஆக்கிரமிப்புகள், அனுமதியின்றி பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும் பேனர்கள் மற்றும் கொடிகள் வரும் 6-ம் தேதி முதல் அகற்றப்படும். ஆகவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.


