News March 13, 2025

கல்வி உதவித் தொகை: மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்

image

பள்ளி மாணவர்கள் போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் OBC, EBC & DNT பிரிவினருக்கு பிரதம மந்திரி (PM YASASVI) கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. 10ஆம் வகுப்பிற்கு ₹75,000, +2க்கு ₹1.25 லட்சமும் வழங்கப்படும். இதற்கு, <>https://umis.tn.gov.in<<>> என்ற தளத்தில் மார்ச் 15 வரை விண்ணப்பிக்கலாம்.

Similar News

News July 10, 2025

மகளிர் உரிமைத் தொகை… மக்களுக்கு அதிர்ச்சித் தகவல்

image

மகளிர் உரிமைத்தொகை திட்ட விரிவாக்கம் ஜூலை 15-ல் தொடங்குகிறது. இதற்கு விண்ணப்பிக்க குடும்பத் தலைவிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், இத்திட்ட விரிவாக்கத்துக்கு அரசு ₹7 கோடி மட்டுமே கூடுதலாக ஒதுக்கியுள்ளதாகவும், புதிதாக 5,833 பேருக்கு மட்டுமே ₹1,000 கொடுக்க முடியும் என்றும் <<17013157>>அன்புமணி<<>> குண்டை தூக்கி போட்டுள்ளார். புதிய பயனர்களுக்கு பணம் கிடைக்க தாமதமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

News July 10, 2025

காயத்தால் வெளியேறிய ரிஷப் பண்ட்..

image

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்டில் ரிஷப் பண்டுக்கு காயம் ஏற்பட்டதால் அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதில் துருவ் ஜுரேல் விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார். பும்ரா வீசிய 33-வது ஓவரில் அவரின் விரலில் பந்து வலுவாக தாக்கியது. பிசியோ உடனடியாக சிகிச்சை அளிக்க, வலி குறையாததால் பண்ட் வெளியேறினார். ரிஷப் பண்ட்டால் தொடந்து விளையாட முடியவில்லை என்றால் இந்தியாவுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.

News July 10, 2025

இபிஎஸ்ஸை கண்டித்து 14-ம் தேதி ஆர்ப்பாட்டம்: திமுக

image

இபிஎஸ்ஸை கண்டித்து கோவையில் 14-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்ட அறிவிப்பில், கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்ததை இபிஎஸ் விமர்சித்திருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். கல்லூரிகள் திறப்பது பாவம், உங்களுக்கெல்லாம் கல்வி எதற்கு என சங்கிகள் குரலாய் இபிஎஸ் ஒலிக்கிறார் எனவும் ராஜீவ்காந்தி சாடியுள்ளார்.

error: Content is protected !!