News September 20, 2025
கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க அழைப்பு

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், சீர்மரபினர் மாணவர்கள் 2025-26ம் ஆண்டுக்கான தேசிய கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 30ம் தேதி. கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் https://scholarships.gov.in இல் கிடைக்கும் என கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் தெரிவித்துள்ளார்.
Similar News
News September 20, 2025
கோவை மக்களுக்கு அரிய வாய்ப்பு!

கோவை ராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், நகை மதிப்பீட்டாளர் பயிற்சி அளிக்கப்படவுள்ளது. அடுத்த மாதம் 15 ஆம் தேதி பயிற்சி துவங்க உள்ளது. வரும் செப்.22 ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. விருப்பமுள்ளவர்கள் சாய்பாபா காலனி அலுவலகத்தை நேரிலும், 0422 – 244 2186 என்ற எண்ணிலும் அழைக்கலாம் என, கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நேற்று தெரிவித்துள்ளார்.
News September 20, 2025
கோவை: நவ.1 ஆம் தேதி முதல் இது கட்டாயம்!

பசுமையான மலைகள், இதமான சூழல் ஆகியவற்றை ரசிப்பதற்காகவே கோவை வால்பாறைக்கு அதிகளவிலான சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் வரும் நவ.1 ஆம் தேதி முதல் நீலகிரி, கொடைக்கானல் போல வால்பாறை வரும் சுற்றுலா பயணிகளுக்கும் இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும். வால்பாறைக்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதை சோதனையிடவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
News September 20, 2025
கோவை: பழங்குடியினர் விருந்துடன் பரளிக்காடு சுற்றுலா!

மேற்கு தொடர்ச்சி மலையின் அழகையும், பில்லூர் அணைப்பகுதியையும், வனப்பகுதியின் முக்கியத்துவத்தையும் அறிந்து கொள்ளும் வகையில், கோவை, பரளிக்காடு சூழல் சுற்றுலா, வார இறுதி நாட்களில், வனத்துறையினரால் ஒருங்கிணைக்கப்படுகிறது. இங்கு செல்ல முன்பதிவு அவசியம். செல்ல விரும்புவோர், <