News October 20, 2024

கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பம் வரவேற்பு

image

பிரதமர் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை பெற பயிலும் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகள் விண்ணப்பிக்கலாம். மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய http://scholarships.gov.in மற்றும் http://socialjustice.gov.in ஆகிய மத்திய அரசின் இணையதளங்களை அணுகலாம் என மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

Similar News

News July 9, 2025

வேலூர் அருகே விபத்து: ஒருவர் பலி

image

வேலூர் சத்துவாச்சாரி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு சாலையைக் கடக்க முயன்ற 35 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. படுகாயமடைந்த அவரை அப்பகுதி மக்கள் மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். சத்துவாச்சாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

News July 9, 2025

வேலூரில் ஊர்க்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு

image

வேலூரில் ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 24 பணியிடங்களுக்கு 113 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இவர்களுக்கான நேர்காணல் இன்று வேலூர் நேதாஜி மைதானத்தில் நடந்தது. இதில் 90 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு உயரம், எடை, ஆண்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், பெண்களுக்கு 50 மீட்டர் ஓட்டம் நடந்தது. இதனை வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதிவாணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்

News July 9, 2025

வெற்றி நிச்சயம் திட்டத்திற்கு தேவையான தகுதிகள் (2/2)

image

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் தமிழ்நாட்டை சேர்ந்த 18 -35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். மேலும், வேலை தேடுபவராகவும் படிப்பை பாதியில் நிறுத்தியவராகவும் இருக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க ஆதார் கார்டு, சாதி சான்றிதழ், வங்கி கணக்கு, வோட்டர் ஐடி, வருமான சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், மின்னஞ்சல் ஐடி& மொபைல் எண் ஆகியவை கட்டாயம் தேவைப்படுகின்றன. நண்பர்கள், உறவினர்களுக்கு பகிரவும்.

error: Content is protected !!