News July 21, 2024
கல்வராயன் மலைப்பகுதியில் ஆய்வு செய்த ஏடிஜிபி

கல்வராயன் மலைப்பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மற்றும் ஐஜி அஸ்ரா கார்க் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்பி ரஜத் சதுர்வேதி ஆகியோர் நுண்ணறிவு பிரிவு போலீசார் ஆவடி தமிழ்நாடு பேரிடர் மீட்பு குழுஉதவியுடன் இன்னாடு, சேராப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில், ட்ரோன் கேமராவை பறக்க விட்டு ஆய்வில் ஈடுபட்டனர்.
Similar News
News July 11, 2025
கள்ளக்குறிச்சியில் கல்லை டிஜிட்டல் டிரைவ்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், புத்தொழில் மற்றும் புத்தாக்க மையம் மற்றும் மாவட்ட தொழில் மையம் இணைந்து புத்தொழில் சூழலியலை வலுப்படுத்தும் நோக்கத்தில், “கல்லை டிஜிட்டல் டிரைவ்” நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தலைமையில் நேற்று (ஜூலை 10) வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் அரசு அதிகாரிகள், துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
News July 11, 2025
திருக்கோவிலூரில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர் நகராட்சியில் சுமார் 3,413 உங்களுடன் ஸ்டாலின் திட்ட விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகள் வீடு வீடாக வழங்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. மேலும் திருக்கோவிலூர் நகராட்சியில் ஜூலை 17 ஆம் தேதியன்று உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் 11 இடங்களில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
News July 11, 2025
கள்ளக்குறிச்சியில் குரூப் 4 தேர்வு கண்காணிப்பு பணிகள் தீவிரம்

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 4 பதவிகளுக்கான தேர்வு நாளை (ஜூலை 12) நடைபெற உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 97 தேர்வு கூடங்களில் 28,211 தேர்வர்கள் தேர்வு எழுத உள்ளனர், தேர்வினை கண்காணிப்பதற்காக 30 சுற்றுச்சூழல், 102 காவல் அலுவலர்கள், 97 கண்காணிப்பு அலுவலர்கள், 10 பறக்கும் படை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தகவல் தெரிவித்துள்ளார்.