News April 22, 2024

கல்லூரி மாணவி மாயம்: போலீசார் விசாரணை

image

ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை சேர்ந்த பாண்டி என்பவரது மகள் லத்திகா (18), இவர் ராமநாதபுரம் தனியார் கல்லூரியில் பிஎஸ்சி 2ம் ஆண்டு படித்துவருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. எங்கு தேடியும் கிடைக்காததால் அவரது தாயார் முத்துலெட்சுமி அளித்த புகாரில் கேணிக்கரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News

News August 20, 2025

வாதவனேரி, வெங்கலக்குறிச்சியில் புதிய CCTV கேமராக்கள்

image

மாவட்ட காவல்துறையின் SAFE RAMNAD திட்டத்தின் கீழ், சத்திரக்குடி காவல் நிலையம், கீழத்தூவல் பகுதியில் உள்ள வாதவனேரி, வெங்கலக்குறிச்சி கிராமங்களில் புதிதாக 10 CCTV கேமராக்கள் (வாதவனேரி-6, வெங்கலக்குறிச்சி-4) நிறுவப்பட்டன. 2025ஆம் ஆண்டில் மொத்தம் 2,942 கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. இதற்கான ஒத்துழைப்புக்கு பொதுமக்கள், நிர்வாகிகளுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ், IPS நன்றி தெரித்தார்.

News August 20, 2025

பாம்பன் மீனவர்களுக்கு ரூ.3.50 கோடி ரூபாய் அபராதம்

image

பாம்பன் பகுதியை சேர்ந்த 9 நாட்டுப்படகு மீனவர்களின் வழக்கு நேற்று புத்தளம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தலா ஒரு மீனவருக்கு 3 கோடியே 50 லட்சத்தி 20 ஆயிரம் ரூபாய் (இலங்கை பணம்) அபராத தொகையாக செலுத்த வேண்டும் எனவும், அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில் 3 மாத காலம் மீனவர்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

News August 20, 2025

ராம்நாடு: கோர்ட்டில் வேலை! உடனே APPLY

image

ராமநாதபுரம் மக்களே, தமிழக நீதிமன்றங்களில் ASSISTANT PROGRAMMER பணியிடங்களுக்கு 41 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் துறையில் டிகிரி (B.E/M.E உட்பட) முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். வரும் செப். 9க்குள் <>உயர்நீதிமன்ற இணையதள<<>> பக்கத்திற்கு சென்று இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மாவட்ட நீதிமன்றங்களில் பணியமர்த்தப்படுவர். SHARE IT.

error: Content is protected !!