News April 9, 2024
கல்லூரி மாணவிகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி

2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 100% வாக்களிக்க வேண்டும் என்பதற்காக (SVEEP-Systematic Voters Education and Electoral Participation) பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், காஞ்சிபுரம் பச்சையப்பன் பெண்கள் கல்லூரியில் மாணவியர்கள் கோலங்கள் வரைந்து தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.
Similar News
News November 5, 2025
காஞ்சிபுரத்தில் இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று (நவ.4) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.
News November 4, 2025
காஞ்சி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

காஞ்சிபுரம் மாவட்ட மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். இதை உடனே SHARE பண்ணுங்க!
News November 4, 2025
காஞ்சிபுரத்தில் குழந்தை பேறு அருளும் அற்புத கோவில்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்த திருமாலின் திவ்ய தேச கோவில்களில் திருவூரகம் உலகளந்த பெருமாள் கோவில் 50 வது திவ்ய தேச கோவிலாக போற்றப்படுகிறது. இத்தலம் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட தலமாகும்.1000 முதல் 2000 ஆண்டுகள் பழமையான இக்கோவிலில்சாமி தரிசனம் செய்தால் குழந்தைப்பேர் கிடைக்குமென்று சிறப்பும் உள்ளது, குழந்தை தடை உள்ளவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.


