News January 5, 2026
கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் ரெடி!

கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தை CM ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். ‘உலகம் உங்கள் கையில்’ என்ற இத்திட்டத்தில் மொத்தம் 20 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்கள் வழங்கப்பட உள்ளன. இதில் முதற்கட்டமாக 10 லட்சம் மாணவர்களுக்கு சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் விழாவில் லேப்டாப் வழங்கப்படவுள்ளது. AI மென்பொருளான Perplexity Pro-வின் 6 மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.
Similar News
News February 2, 2026
விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தள்ளிவைக்கப்படுகிறதா?

வேலூரில் பிப்ரவரி 2-வது வாரத்தில் விஜய்யின் மக்கள் சந்திப்புக் கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக வேலூர் அருகே அகரம்சேரியில் இடம் தேர்வு செய்யப்பட்டு சீரமைக்கும் பணிகள் வேகமெடுத்தன. இந்நிலையில், விஜய் மக்கள் சந்திப்புக்கு இதுவரை காவல்துறை அனுமதி கிடைக்கவில்லை. இதனால், பிப்ரவரி 4-வது வாரத்திற்கு மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தள்ளிவைக்க தவெக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
News February 2, 2026
BREAKING: நாளை தமிழகம் முழுவதும் ஸ்டிரைக்..எச்சரிக்கை

ஊதிய உயர்வு உள்ளிட்ட 21 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அங்கீகரிக்கப்படாத அரசு ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இந்நிலையில், அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் தலைமை செயலாளர் முருகானந்தம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது; நாளை தற்செயல் விடுப்பு எடுக்க அனுமதியில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
News February 2, 2026
செல்போனில் இதை மாற்றினால் 3 ஆண்டு ஜெயில்

TRAI தொலைத்தொடர்புச் சட்டம் 2023-ன் கீழ் செல்போனின் IMEI நம்பர், மோடம், சிம் கார்டு, ரேடியோ ஆகியவற்றில் அடையாளங்களை மாற்றுவது ஜாமினில் வெளிவர முடியாத குற்றமாகும். இதனை மீறுவோருக்கு 3 ஆண்டு ஜெயில் (அ) ₹50 லட்சம் அபராதம் (அ) 2-ம் சேர்த்து விதிக்கப்படும் என தொலைத்தொடர்புத் துறை(DoT) எச்சரித்துள்ளது. இதனால், Second Hand-ல் போன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் வாங்குவோர் ஜாக்கிரதையாக இருங்கள்.


