News April 25, 2025
கல்லூரி மாணவன் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியில் அமைந்துள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவன் நாவுபாடா(19) என்பவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தற்கொலை சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் மாணவரின் உடல் விருதுநகர் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
Similar News
News April 25, 2025
விருதுநகரில் மானியத்துடன் கூடிய நுண்ணீர்பாசனம்

‘துளி நீரில் அதிக பயிர்” திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்திற்கு 1100 ஹெக்டர் பொருள் இலக்கும், ரூ.5.50 இலட்சம் நிதி இலக்கும் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதில் நுண்ணீர்ப்பாசன அமைப்புகள் நிறுவுவதற்கு சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், இதர விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளவர்கள் MIMIS என்ற இணையத்தின் மூலம் பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.
News April 25, 2025
விருதுநகர்: ரயில்வேயில் உதவி லோகோ பைலட் பணி

மதுரை ரயில்வே கோட்டம் தனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில் இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 9,970 உதவி லோகோ பைலட் பணிக்கான அறிவிப்பை வௌியிட்டுள்ளது. இதில் தெற்கு ரயில்வே சார்பில் 510 பணியிடங்கள் உள்ள நிலையில் மாத ஊதியமாக ரூ.19900 வழங்கப்படும் .இதற்கு ஏப்.12 முதல் மே 11 வரை rrbchennai.gov.in என்ற ரயில்வே வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விருதுநகர் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
News April 25, 2025
வண்டல்மண் தேவைப்படும் விவசாயிகளுக்கு அழைப்பு

விருதுநகர் மாவட்டத்தில் வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் இணையதளத்தில் பதிவு செய்த விபரங்கள் மற்றும் தேவையான கண்மாய் பட்டியல் விபரங்களுடன் கோட்டாட்சியர், ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். மண் எடுப்பதற்கு உரிய ஆவணங்களான பட்டா மற்றும் ஆதார் எண்ணுடன் பதிவு செய்து, அதற்கான ரசீதினை பெற்று கலந்து கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.